தொடரும் மருத்துவத்துறையின் அவலம் - Continues neglect of the Medical Department

தமிழகத்தில் மருத்துவத்துறையின் நிலை நாளுக்கு நாள் மோசமாக்கிக் கொண்டிருக்கிறது. இதை இந்த அரசும் கவனிக்க தவறுகிறது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் வழங்குகிறோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் பெருமை பேசிக் கொள்கிறார்கள். செயலற்ற நிலையில் ஒரு அரசு இருக்குமாயின் இந்த தொடர்கதை நிகழத்தான் செய்யும். மருத்துவத்துறையில் விபத்து என்ற ஒன்று சாதாரணம் என்று எளிதாக கடந்து விடக் கூடியதல்ல இது. அஜாக்கிரதையின் வெளிப்பாடு. 

கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கடலூர் காலனியைச் சேர்ந்த பொம்மி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு, சுகப்பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டாகி வெளியே வந்தது. இதையடுத்து வயிற்றுக்குள் சிக்கி கொண்ட குழந்தையின் உடலை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், கடலூர் காலனி பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மனைவி பொம்மி (20). இவர் நிறைமாத கர்ப்பிணி பெண் ஆவார் இவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் பிரசவத்துக்காக கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று அதிகாலை 6 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு பணியில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர் மட்டும் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த செவிலியர் முத்துகுமாரி என்பவர் பொம்மிக்கு பிரசவம் பார்த்ததாகவும், இதில் குழந்தையின் தலை மட்டும் துண்டாக வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக பொம்மியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு, அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் தங்கியிருந்த குழந்தையின் மீதி உடல் வெளியே எடுக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக, பொம்மியின் பெற்றோர் மற்றும் கணவர் அளித்த புகாரின்பேரில், கூவத்தூர் போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அலட்சத்தியத்தால் நடந்த ஒன்றே. குழந்தை பிறக்கப்போகிறது என்ற கனவோடு இருந்த தாய் தந்தையின் மனவேதனையை இங்கே எழுத்துக்களால் பதிவிட முடியாது.  அந்த பெண்ணுக்கு இழப்பீடு தருவதால் என்ன பயன்?!? அந்த செவிலியரை பணியிடை நீக்கம் செய்வதாலும் அன்று பணியில் இல்லாத மருத்துவர்களை பணிமாற்றம் செய்வதலும் என்ன பயன்?? என்று தீரும் இந்த அவலம்?!? என்ன செய்யப் போகிறோம் நாம்?!

Comments

Popular posts from this blog

தாய்லாந்தின் சிறந்த சுற்றுலா தளங்கள் - Best Tourist Place in Thailand

குப்பை