தாய்லாந்தின் சிறந்த சுற்றுலா தளங்கள் - Best Tourist Place in Thailand
நம்ம இந்திய டூரிஸ்டுகளோட தாய்நாடுதான் நம்ம தாய்லாந்து. ஏன்னா நம்ம ஆளுங்க எங்க ஃபாரின் டிரிப் போகணும்னாலும் மொதல்ல மைண்டுக்கு வர்ற நாடு தாய்லாந்து.
புத்தர் கோவில், அசத்தலான பீச்சஸ், மார்க்கெட்டுக்கு நடுவுல சம்பந்தமை இல்லாம உள்ள புகுந்து போற டிரெயின், பச்சைப்பசேல்னு விவசாய கிராமங்கள், அதுக்கு அப்படியே எதிரா கலர் கலரான பார்ட்டீஸ், இதெல்லாமே தான் நம்ம ஆசியோவோட The Best Tourist Spot ஆ தாய்லாந்து நிக்குது.
சூப்பர் ஸ்டார் எட்டு எட்டா வாழ்க்கைய பிரிக்க சொல்லிருக்காரு. இப்போ நான் பெஸ்ட்டான எட்டு விஷயங்களை சொல்லப் போறேன்.
8. RAILAY
நீங்க பாகுபலி மாதிரி மலைப்பாறைகளை பார்த்த உடனே தாவணும்னு Tempt ஆகுற ஆளா இருந்தா கண்டிப்பா Railwayவ மிஸ் பண்ணியே ஆகணும். இந்த இடத்துக்கு ரோடோ பிளைனோ கிடையாதுங்க. வெறும் போட்ல மட்டும்தான் போக முடியும். இங்க ரொம்ப கம்மி பட்ஜெட்ல இருந்து பெரிய Resort ல Accommodation இருக்குறதால எல்லா விதமான மக்களும் வர்றாங்க..
7. PHANOM RUNG
பேரு வேணும்னா அந்த ஊரு மொழில இருக்கலாம் ஆனா இது நம்ம ஊரு சிவனுக்காக அங்க கட்டின கோவில். 10ல இருந்து 13 சென்சுரிக்குள்ள கட்டப்பட்டதா நம்பப்படுற இந்த மாபெரும் கோவில் கைலாச மலையை Represent பண்றதா கட்டிருக்காங்க.
இந்த கோவிலோட Speciality என்னு பார்த்தா 4 வருஷத்துக்கு ஒரு தடவை இருக்குற எல்லா 15 வாசல் வழியாவும் சூரிய ஒளி அடிக்கும். இந்த Event அப்போ லோக்கல்ல இருக்குற மக்கள் இதை பெரிய திருவிழாவா கொண்டாடுறாங்க.
6. PAI
நம்ம சென்னைல இருக்குற OMR மாதிரிதான். ஒரு காலத்துல ஒரு அமைதியான கிராமம். இன்னைக்கு தாய்லாந்தோட Most Happening Tourist Destination. ஷாப்பிங்ல Interesting இல்லாதவங்க கூட இங்க நைட் டைம்ல கிடைக்குற Street food க்கு டைம் ஸ்பென்ட் பண்ண வருவாங்க. மலையடிவாரத்துல இருக்குறதுனால TREKKING பண்றவங்களோட Attention வருது. ஏன்னா மலை உச்சில அழகான ஒரு புத்தர் கோவில் இருக்கு. அங்க இருந்து கிடைக்கிற View க்காகவே அங்க போவாங்க. இங்க நிறைய சின்ன சின்ன அருவியும் இருக்கு.
5. CHIANG RAI
தாய்லாந்தோட வடக்கு மூலைல இருக்குற Chiang rai ல நம்ம பாண்டி பஜார் மாதிரி எக்கசக்க கடைகள் இருக்கு. இங்க என்ன கிடைக்கும்னு பார்த்தா கிட்டத்தட்ட எல்லாருக்குமே எல்லாமே கிடைக்கும். பகல் டைம்ல மணிரத்னம் படம் மாதிரி சாந்தமா இருக்குற Chiang rai நைட் டைம்ல வெங்கட் பிரபு படம் மாதிரி நியான் லைட்டோட பார்ட்டி மூடுக்கு மாறிடும்.
4. KHAO SAK NATIONAL PARK
காடு, மலை, உயரமான பள்ளத்தாக்கு இப்படி எங்க பார்த்தாலும் இயற்கை அழகு Overflow ஆகுற இடம்தான் இது. இங்க Jungle க்கு நடுவுல Trekking போகலாம். Wild Life Photography பண்ணலாம். சுத்தமான கடல் தண்ணீல நீச்சல் அடிக்கலாம். மல்லாக்க படுத்து இயற்கை அழகை ரசிச்சுக்கிட்டே ரிலாக்ஸ் பண்ணலாம்.
3. KANCHANABURI
டெத்ரெயில்வே எங்க இருக்குனு வழி கேட்டா யார் வேணும்னா சொல்லுவாங்க. சிட்டிக்கு வெளிய Erawan national parkல ஒரு அழகான அருவி இருக்கு பாருங்க. ஜோடியா அங்க போனா செம்ம ரொமான்டிக்கா இருக்கும்.
2. BANGKOK
தாய்லாந்துலேயே மிகப்பெரிய சிட்டி. தாய்லாந்த்தோட Capital. பெரிய பெரிய Building, Shopping Malls, Traffic எல்லாம் இருந்தாலும் அங்க அங்க அழகான Riverல ஓடுற போட், சீனரி எல்லாம் அந்த தரமான டூரிஸ்ட் Placeஆ காட்டுது. Bangkok வர்றவங்க உலகத்துலயே மிகப்பெரிய Market CHATUCHAK MARKETல ஷாப்பிங் பண்ணாம இருக்கவே மாட்டாங்க. அப்புறம் நம்ம பேச்சிலர் பசங்க எல்லாம் குஷியாகுற மாதிரி Nightlife கூட இருக்கு. அப்படியே Emerald Temple, Wat Arun, Grand Palace மிஸ் பண்ணிர கூடாது.
1.THAI ISLANDS
ஏழாம் அறிவு, வில்லு, புலின்னு தமிழ் சினிமால நெறைய பாட்டு இங்க Shoot பண்ணிருக்காங்க. Waters Boat, Diving, Boating னு நெறைய விஷயம் இங்க இருக்கு. தாய்லாந்துக்கு பேச்சிலராவும் போலாம். பேமிலியாவும் போலாம். தனியாவும் போலாம். ஆகா மொத்தம் தாய்லாந்து நீங்க கண்டிப்பா போக வேண்டிய ஒரு இடம்.

Comments
Post a Comment