Posts

Showing posts from 2019

கொலைகாரன்

நேதாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் – ஜனவரி 14, 2005… சோமசுந்தரம் காலையில் தன்னுடைய வீட்டு வாசலிலேயே குத்தப்பட்டார். அன்று கோர்ட் விடுமுறை நாள் வேறு… நேதாஜி நகர் வீட்டில் காலை நிதானமாகவே எழுந்திருந்து தன் வீட்டு தோட்டத்துக்கு நீர் இறைத்து விட்டு டீ சாப்பிடுகையில் ‘தினத்தந்தி’யில் அரசியல் பக்க ஓரத்தில் யார் இறந்தார்கள் என்பதை முதலில் பார்த்துவிட்டு பிறகு முன் பக்கத்திற்கு வந்தார். சிறிய எழுத்தில் காலமானவர்களின் வயதையெல்லாம் தன் வயதுடன் ஒப்பிடுவது அவருடைய வழக்கமாகி விட்டது. டீ குடித்துவிட்டு வராந்தா மர நாற்காலியில் இருந்து எழுந்த போது அந்த அந்நியன் அணுகினான். எப்போதும் நாய் குரைக்கும். இன்று மீனா அதை தன்னுடன் வாக்கிங் அழைத்துப் போயிருந்தாள். போன வாரம்தான் தன் வீட்டில் பாதுகாப்புக்காக அசோக் ஏஜென்ஸியில் இருந்து ஒரு ஆள் போட்டிருந்தார். அவன் மீனாவுடன் போயிருந்தான். கவனக்குறைவான வேளை. வலுவான இரும்புக் கதவு இன்று தாளிடாமல் இருந்தது போல. அந்த அந்நியன் தள்ளித் திறந்து வந்தான். குறுகிய சமயத்தில் அவன் நடுத்தர வயது, வட்ட முகம், வெள்ளை நிறம், காலர் உள்ள சட்டை, அதனுள் புலப்பட்ட சங்கிலி. மீ...

தொடரும் மருத்துவத்துறையின் அவலம் - Continues neglect of the Medical Department

தமிழகத்தில் மருத்துவத்துறையின் நிலை நாளுக்கு நாள் மோசமாக்கிக் கொண்டிருக்கிறது. இதை இந்த அரசும் கவனிக்க தவறுகிறது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் வழங்குகிறோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் பெருமை பேசிக் கொள்கிறார்கள். செயலற்ற நிலையில் ஒரு அரசு இருக்குமாயின் இந்த தொடர்கதை நிகழத்தான் செய்யும். மருத்துவத்துறையில் விபத்து என்ற ஒன்று சாதாரணம் என்று எளிதாக கடந்து விடக் கூடியதல்ல இது. அஜாக்கிரதையின் வெளிப்பாடு.  கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கடலூர் காலனியைச் சேர்ந்த பொம்மி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு, சுகப்பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டாகி வெளியே வந்தது. இதையடுத்து வயிற்றுக்குள் சிக்கி கொண்ட குழந்தையின் உடலை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், கடலூர் காலனி பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மனைவி பொம்மி (20). இவர் நிறைமாத கர்ப்பிணி பெண் ஆவார் இவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் பிரசவத்துக்காக கூவத்தூர் ...

பிரிவும் சந்திப்பும் - Dividing and Meeting

வீட்டில் தனியாக நான், முற்றத்தை பார்த்தபடி. அவள் என்னை பார்த்து சிரிக்கிறாள் சுவரில் காலண்டராய். அதற்கு கீழே "வா வெண்ணிலா!உன்னைத்தானே வானம் தேடுதே" மோகன் சூழ்நிலைக்கேற்ற பாடலில் கடுப்பேற்றுகிறார். பிரிந்து சென்று நூறு நாட்கள் ஆகப் போகிறது. அடிக்கடி சென்று சந்தித்தாலும் அவளே வேண்டுமென அடிமனம் அழுகிறது. என்ன செய்ய, குழந்தையாய் இருந்தாலும் சமாதானம் செய்யலாம். அடிக்கடி அம்மா வீட்டிற்கு செல்வதை வழக்கமாக்கி விட்டாள் ( கோபித்துகொண்டு அல்ல ). அவளுக்கு எப்படி புரிய வைப்பது "நீ இல்லையேல் இனி நான் இல்லையே.. உயிர் நீயே" என்று யேசுதாஸ் அனுதினமும் காதுக்குள்ளே கதறுகிறார் என்று. எத்தனை முறைதான் பிரிவது. 5 வருட காதலுக்கு பின் கூடிய திருமணம். அந்த 5 வருட காலத்தில் அவளை நான் 10 முறை தான் சந்தித்திருப்பேன். கிட்டத்தட்ட 1800 நாட்களுக்கு மேல் பிரிந்திருந்தாகி விட்டது. இப்போது திருமணத்திற்கு பின்பும் பிரிய நேரிடுகிறது. இதை சொன்னால் "என்ன செய்ய?" என்று இரண்டே வார்த்தைகளில் முடித்துவிடுவாள். என்னை விட அவள் புலம்புவதுதான் அதிகம். இந்த வாரம் வருவாயா? எப்ப வருவ? என்ற கேள்விகள் தி...

தாய்லாந்தின் சிறந்த சுற்றுலா தளங்கள் - Best Tourist Place in Thailand

Image
நம்ம இந்திய டூரிஸ்டுகளோட தாய்நாடுதான் நம்ம தாய்லாந்து. ஏன்னா நம்ம ஆளுங்க எங்க ஃபாரின் டிரிப் போகணும்னாலும் மொதல்ல மைண்டுக்கு வர்ற நாடு தாய்லாந்து.  புத்தர் கோவில், அசத்தலான பீச்சஸ், மார்க்கெட்டுக்கு நடுவுல சம்பந்தமை இல்லாம உள்ள புகுந்து போற டிரெயின், பச்சைப்பசேல்னு விவசாய கிராமங்கள், அதுக்கு அப்படியே எதிரா கலர் கலரான பார்ட்டீஸ், இதெல்லாமே தான் நம்ம ஆசியோவோட The Best Tourist Spot ஆ தாய்லாந்து நிக்குது.  சூப்பர் ஸ்டார் எட்டு எட்டா வாழ்க்கைய பிரிக்க சொல்லிருக்காரு. இப்போ நான் பெஸ்ட்டான எட்டு விஷயங்களை சொல்லப் போறேன். 8. RAILAY நீங்க பாகுபலி மாதிரி மலைப்பாறைகளை பார்த்த உடனே தாவணும்னு Tempt ஆகுற ஆளா இருந்தா கண்டிப்பா Railwayவ மிஸ் பண்ணியே ஆகணும். இந்த இடத்துக்கு ரோடோ பிளைனோ கிடையாதுங்க. வெறும் போட்ல மட்டும்தான் போக முடியும். இங்க ரொம்ப கம்மி பட்ஜெட்ல இருந்து பெரிய Resort ல Accommodation இருக்குறதால எல்லா விதமான மக்களும் வர்றாங்க.. 7. PHANOM RUNG பேரு வேணும்னா அந்த ஊரு மொழில இருக்கலாம் ஆனா இது நம்ம ஊரு சிவனுக்காக அங்க கட்டின கோவில். 10ல இருந்த...

சிட்டுக்குருவியும் காதலும் - Sparrow and Love

        "சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே" இப்பாடலை கேட்காத ஆளே இல்லை எனலாம். சிவாஜி கணேசன், சரோஜாதேவி நடித்த புதிய பறவை படத்தில் இடம்பெற்ற அருமையான பாடல். இப்பாடலை பற்றி பேசக்காரணம்,       இன்று உலக சிட்டுக்குருவிகள் தினமாம். சிட்டுக்குருவியை இன்று இணையத்தில் மட்டும் காண்கிற அவலம். என்னதான் ரஹ்மானின் "மழைக்குருவி" பாடல் நெஞ்சை உறங்க வைத்தாலும் சிறுவயதில் அந்த சிட்டுக்குருவி போட்ட "கீச் கீச்" என்ற தேனிசைச் சத்தத்திற்கு இணையாகவில்லை. என்னே அழகு!       இணையமில்லாத அந்த பள்ளிப்பருவ பொழுது பறவைகளுடனும் மற்ற உயிரினங்களுடனும் இன்பமாக கழிந்தது. புரியாத அந்த வயதில் சிறிய உண்டிகோலை கொண்டு சிட்டுக்குருவியை அடிக்க துரத்தியது அருமையான நினைவு. ஆனால் இதுவரை அடிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.        கையடக்க உடல், சாம்பல் நிற முதுகு, கருமை நிற கழுத்து, சிறிய கண்கள், சிறிய அலகு, சற்று நீண்ட வால் இவைதாம் அவற்றின் அடையாளங்கள். காலையில் சிட்டுக்குருவியின் சத்தம் கேட்டு விழிக்காத நாளில்லை எனலாம். அந்த அளவி...